சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை ஏகதின பிரம்மோற்சவம்
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் முன்னிட்டு ஏகதின பிரம்மோற்சவம் நாளை (17ம் தேதி) நடக்கிறது.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுதும் மூலவர் பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.அதையொட்டி நாளை (17ம் தேதி) வியாழக்கிழமை ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:30க்கு தோமாலை சேவை. 7:00மணிக்கு கொடியேற்றம், 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பல்வேறு வாகனகங்களில் சேவை நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.