விபத்தில் ஒருவர் பலி
சிறுபாக்கம்; சிறுபாக்கம் அருகே பள்ளத்தில் மோட்டார் பைக் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் இறந்தார். வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 40. இவர் கடந்த 11ம் தேதி இரவு தனது மோட்டார் பைக்கில் இரவு 7.30 மணியளவில் கச்சிமயிலூர் சாலை வளைவு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவர்கள், அதனை கண்டு சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுபாக்கம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.