பரங்கிப்பேட்டையில் துணை சுகாதார நிலையம் திறப்பு
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில், புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலை திறப்பு விழா நடந்தது. பரங்கிப்பேட்டை கொடிமரத் தெருவில் 2022-2023ம் ஆண்டு 15 வது நிதிக்குழுவின் மூலம் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதியதாக துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதையடுத்து நேற்று துணை சுகாதார நிலையத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதைதொடர்ந்து, பரங்கிப்பேட்டை பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் குத்துவிளக்கேற்றி வைத்தார். விழாவில், செயல் அலுவலர் மயில்வாகனன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன், துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன்கள் செழியன், நடராஜன், முன்னாள் நகர செயலாளர்கள் முனவர் உசேன், பாண்டியன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், நகர அவைத் தலைவர் தங்கவேல், கவுன்சிலர்கள் தையல்நாயகி கணேசமூர்த்தி, ராஜகுமாரி மாரியப்பன், நஜிருன்னிசா, பசிரியாமா ஜாபர் அலி, சரவணன், நிர்வாகிகள் சரவணன், சிவபாலன், அலி அப்பாஸ், அஜீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.