மேலும் செய்திகள்
தி.மு.க., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
16-Sep-2025
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் வர்த்தகர்கள் முன்னேற்ற சங்க அலுவலகம் திறப்பு விழா நடந்தது. தலைவர் நாசர் அலி முன்னிலை வகித்தார். செயலாளர் மணிவண்ணன், அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நெல்லிக்குப்பம் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நீண்ட காலமாக நடந்து வரும் நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஆலை ரோட்டில் கிடப்பில் போட்டுள்ள கடை கட்டும் பணியை துவக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொருளாளர் அசன் அலி,அமைப்பாளர் அதியமான், துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர் ஜனார்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Sep-2025