நகராட்சி பள்ளியில் கழிவறை திறப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கழிவறை 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் திறக்கப்பட்டது.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாமல் இருந்தது.இதற்காக நகராட்சி மூலம் 13 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கழிவறைகள் கட்டப்பட்டது. கழிவறை கட்டி முடித்து பல மாதமாகியும் திறக்கபடாததால் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நேற்று புதிய கழிவறையை மாணவர்கள் பயன்பாட்டுக்காக நகர மன்ற தலைவர் ஜெயந்தி திறந்து வைத்தார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், இன்ஜினியர் வெங்கடாஜலம், தலைமையாசிரியர் தேவநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.