உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முறையான பாதுகாப்பில்லாமல் வீணாகி வரும் நெல் மூட்டைகள்

 முறையான பாதுகாப்பில்லாமல் வீணாகி வரும் நெல் மூட்டைகள்

புவனகிரி: தற்காலிக சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மக்கி வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கீரப்பாளையத்தில் தற்காலிக சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைத்துள்ளனர். இதில் முறையான பாதுகாப்பு இல்லாமல் தரமற்ற பிளாஸ்டிக்கால் மூடி வைத்துள்ளனர். இதனால் வெயிலில் பிளாஸ்டிக் பாய் உருகி நெல் மூட்டையில் படிந்துள்ளது. கடந்த மாதத்தில் பெய்த மழையினால் நெல் மூட்டையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. நனைந்த மூட்டைகளை இடமாற்றி உலர்த்தாமல் விட்டு, விட்டனர். இதனால் நெல் மூட்டைகள் மக்கி, சாலையில் நடந்து செல் லும் பொழுது துர்நாற்றம் வீசுகிறது. உயர் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் துரித கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை