உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீமுஷ்ணத்தில் வாய்க்கால் தூர் வாரததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

ஸ்ரீமுஷ்ணத்தில் வாய்க்கால் தூர் வாரததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் கள்ளிப்பாடி, கீழ்புளியங்குடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள தாமரை ஏரி, குன்னத்தேரி ஆகிய ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வாய்க்கால்கள் ஆழமாக தூர் வாராமல் இருப்பதால் வாய்க்கால்களில் செல்லும் மழை நீர் வயல்கள் வழியாக செல்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக தண்ணீர் வயல்களிலே யே தேங்கி நின்றுள்ளது. இதில் பத்து தினங்களுக்கு முன்பு பயிரிட்ட இளம் நாற்றுக்கள் முழுவதும் பல தினங்களாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரணமாக சில தினங்கள் பெய்த கன மழைக்கே பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் விரைவாக வடியும் வகையில் வாய்க்கால்களை ஆழமாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ