கொள்முதல் நிலையத்தில் மழையால் வீணாகும் நெல்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் மழையில் நனைந்து வீணாகிறது.நெல்லிக்குப்பத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு, வெளி மார்க்கெட்டை விட 100 கிலோ மூட்டைக்கு 500 ரூபாய் கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அதிகம் வருகின்றனர்.இங்கு, 16 சதவீதம் ஈரபதம் வரையே நெல் கொள்முதல் செய்கின்றனர்.கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல் நனைந்து சேதமாகியது. மேலும் ஈரப்பதம் அதிகமாகியது. மழை காலத்தில் மட்டும் 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் நெல்லை காக்க வைக்காமல் கொள்முதல் செய்ய வேண்டுமென கோரியுள்ளனர்.அரசு குடோன்களில் போதுமான இடவசதி இல்லாததால் கொள்முதல் நிலையங்களில் வாங்கும் நெல்லை எடுத்து செல்லாமல் உள்ளனர். மேலும் விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்யாததால் நெல் நனைந்து வீணாகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.