உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் பெயிண்டர் அடித்து கொலை; வீட்டிற்கு தீ வைத்ததால் பதற்றம் நீடிப்பு

கடலுாரில் பெயிண்டர் அடித்து கொலை; வீட்டிற்கு தீ வைத்ததால் பதற்றம் நீடிப்பு

கடலுார்; கடலுார் அருகே முன்விரோதத்தில் பெயிண்டரை அடித்து கொலை செய்தவரின், வீடு மற்றும் பைக்கிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் அடுத்த சான்றோர்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் சங்கர், 34; பெயிண்டர். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு சுத்துக்குளம் செந்தாமரை நகர் அருகே மது அருந்தினார்.அப்போது, அங்கு வந்த சிலர், சங்கரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார், சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல்கட்ட விசாரணையில், சுத்துக்குளம் சதீஷ், அன்பு ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன் தாயம் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் சங்கர், சதீஷை தாக்கியுள்ளார். அந்த முன்விரோதம் காரணமாக சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ், அன்பு ஆகியோரை தேடி வருகின்றனர்.இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சங்கரின் ஆதரவாளர்கள், ஆத்திரத்தில் சதீஷின் குடிசை வீட்டையும், அவரது பைக்கையும் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர்.இச்சம்பவத்தால் சுத்துக்குளம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி த.வா.க.,வினர் மற்றும் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை கடலுார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,ரூபன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என தெரிவித்தனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, 5:.15மணிக்கு கலைந்து சென்றனர். அப்போது கொலை வழக்கில் தேடப்படும் நபரின் உறவினர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துவந்தனர். அவரை சங்கரின் உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி