உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை

விருத்தாசலம்: குடும்ப பிரச்னையில் மனமுடைந்த வாலிபர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். விருத்தாசலம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் மணிகண்டன்,30; பெயிண்டர். இவரது மனைவி தேவி. திருமணமாகி 7 ஆண்டாகும் இவர்களக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மணிகண்டன் தேவியை திட்டினார். அதில் கோபித்துக் கொண்ட தேவி தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்க சென்றுவிட்டார். அதில் விரக்தியடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிகண்டனின் தாய் பாமாவதி அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ