மேலும் செய்திகள்
ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதி இடமாற்றம்
18-Sep-2024
பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
06-Sep-2024
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பள்ளி ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுாரில் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி உள்ளது. 69 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியைகள் ஜெயந்திமாலா, கவுசல்யா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று, மாணவர்கள் முன்னிலையில், ஆசிரியை கவுசல்யாவை ஜெயந்திமாலா திட்டியுள்ளார். இதை பார்த்த பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும், மாணவ மாணவிகளை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து வந்து ஆசிரியை ஜெயந்திமாலாவை இடமாற்றம் செய்யக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதையடுத்து போராட்டத்தை பெற்றோர் கைவிட்டதனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
18-Sep-2024
06-Sep-2024