உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலிவு விலை ஓட்டல் ரயில் பயணிகள் கோரிக்கை

மலிவு விலை ஓட்டல் ரயில் பயணிகள் கோரிக்கை

மந்தாரக்குப்பம் : நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுார் - திருச்சி, கடலுார் - சேலம், காரைக்கால் - பெங்களூரு ஆகிய ரயில்கள் நெய்வேலி வழியாக தினசரி சென்று வருகின்றன. இங்கு, 200க்கும் மேற்பட்ட பயணிகள் தினசரி ரயிலில் பயணம் செய்கின்றனர். நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம் இல்லாததால் பயணிகள் நெய்வேலி கடைவீதியில் உள்ள ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவுகள் வாங்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, மலிவு விலை ஓட்டல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை