ஓய்வூதியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
கடலுார்; கடலுாரில் மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் மனோகரன், கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெயராமன், அபரஞ்சி, காசிநாதன், தில்லை கோவிந்தன், சிவராமன், பக்தவச்சலம், பாஸ்கரன், மருதவாணன், வெங்கட்ரமணி, ஆதிமூலம் உட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வூதியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசு தலைமை மருத்துவமனை முதல் மாநகராட்சி அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கூட்டமைப்பு பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.