மேலும் செய்திகள்
ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
05-Oct-2025
கடலுார் : கடலுார் போஸ்ட் ஆபிஸ் அருகில், ஓய்வூதிய விரோத வேலிடேஷனை எதிர்த்து, மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன் வரவேற் றார். கூட்டமைப்பு நிர்வாகிகள் அசோகன், மனோகரன், மேகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். முதியோர் நலன் மற்றும் ஓய்வூதியர் நலன், எட்டாவது ஓய்வூதியக்குழு அமைத்தல், ஓய்வூதிய விரோத வேலிடேஷனை எதிர்த்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஓய்வூதியர் சங்கம், வங்கி ஓய்வூதியர் சங்கம், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் உட்பட பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
05-Oct-2025