உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வூதியர் தின விழா

ஓய்வூதியர் தின விழா

கடலுார் : தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா, கடலுார் வில்வநகர் அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் வரும் 17ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.மாவட்டத் தலைவர் காசிநாதன் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர்கள் கருணாகரன், சிவப்பிரகாசம், கலியமூர்த்தி, பத்மநாபன் முன்னிலை வகிக்கின்றனர்.மாவட்ட செயலாளர் பழனி வரவேற்கிறார்.ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருேஷாத்தமன் துவக்க உரையாற்றுகிறார். கருவூல அலுவலர் நாகராஜன், கூடுதல் கருவூல அலுவலர் சரவணன், பாஸ்கரன், ராமநாதன், கோபால் வாழ்த்திப் பேசுகின்றனர். மாநில செயலாளர் மனோகரன், மாநில துணைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றுகின்றனர். மருதவாணன் நிறைவுரையாற்றுகிறார்.மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ