உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனி விளக்கவுரையாற்றினார். ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் துவக்கவுரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் கோபால், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் பாவாடை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயதடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாநில செயலாளர் மனோகரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் குழந்தை வேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை