உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

கடலுார் : கடலுார் அருகே தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் அடுத்த எம்.புதுார் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் தொழிற்சாலை அமைக்க இடத்தை ஆய்வு செய்ய சிப்காட் அதிகாரிகள் மற்றும் தாசில்தார் பலராமன் ஆகியோருடன் நேற்று மதியம் 3:00 மணிக்கு வந்துள்ளதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், கிராம மக்கள் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து, இப்பகுதியில் தொழிற்சாலை அமைத்தால் பாதிப்பு ஏற்படும். எனவே, தொழிற்சாலை அமைக்கக் கூடாது எனக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !