தீயணைப்பு நிலையம் அமைக்க பெண்ணாடம் மக்கள் எதிர்பார்ப்பு
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30 கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மாவட்டத்தில் பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடமாகும். இதனைச் சுற்றி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், பெ.பூவனுார், அரியராவி, சவுந்திரசோழபுரம், செம்பேரி, தாழநல்லுார், கொத்தட்டை, பெ.பொன்னேரி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில், பெரும்பாலானோர் கூரை வீடுகளிலேயே வசிக்கின்றனர். கிராம பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் 12 கி.மீ., தொலைவிலுள்ள திட்டக்குடி அல்லது 15 கி.மீ., தொலைவிலுள்ள விருத்தாசலம், 20 கி.மீ., தொலைவிலுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டியுள்ளது. அதற்குள், சேதம் அதிகமாவதுடன் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கிராமப்புற சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், தீயணைப்பு வாகனம் குறித்த நேரத்திற்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பெண்ணாடத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து அபாயம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பக்தர்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. பார்த்தசாரதி, விருத்தாசலம்.