கலைஞர் கனவு இல்ல திட்டம் தவணை தொகை கேட்டு மனு
கடலுார்: கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு பொருட்கள் மற்றும் தவணை தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் அடுத்த செல்லஞ்சேரியை சேர்ந்த முருகன் மனைவி செந்தமிழ் அளித்துள்ள மனு:கடந்த ஆகஸ்ட் மாதம் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதன்படி, வீடு கட்டும் பணியை துவங்கி பேஸ் மட்டம் வரை போட்டுவிட்டேன். ஆனால், வீடு கட்ட தேவையான சிமென்ட், கம்பி மற்றும் முதல் தவணை தொகை எனக்கு கொடுக்கவில்லை. முன்விரோதம் காரணமாக வீடு கட்ட விடாமல் தடுக்கின்றனர்.எனவே, எனக்கு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் முதல் தவணை தொகை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.