உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி உரிமைச் சட்ட தொகை கேட்டு மனு

கல்வி உரிமைச் சட்ட தொகை கேட்டு மனு

கடலுார் : கல்வி உரிமை சட்ட நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டி தமிழ்நாடு தனியார் சுயநிதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்க செயலாளர் அய்யனார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மனு விபரம்: தனியார் சுயநிதி பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்டத்தின் படி 25சதவீத இடஒதுக்கீடு வழங்கி கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கான கட்டணத்தொகையை இதுவரை வழங்கவில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பள்ளி தாளாளர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பள்ளி நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வரும், பள்ளி தாளாளர்களின் நலன் கருதி மூன்றாண்டு நிலுவை தொகையை அரசு உடன் விடுவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை