உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனு அளிக்கும் போராட்டம்

மனு அளிக்கும் போராட்டம்

கடலுார் : கடலுாரில் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. மாநில வழக்கறிஞரணி தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் ராகுல், மாவட்ட தலைவர் ராஜாராம், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றனர். மாநில தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கடலுார் அடுத்த கீழ் அழிஞ்சிப்பட்டு செங்காட்டு காலனி, எம்.ஜி.ஆர்., நகர், கரிக்கன் நகர் பகுதிகளைச் சேர்ந்த வீட்டுமனை இல்லாத மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாநகர தலைவர் புஷ்பநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ