உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட நுாலகத்தில் புகைப்பட கண்காட்சி

மாவட்ட நுாலகத்தில் புகைப்பட கண்காட்சி

கடலுார்: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார். மாவட்ட மைய நுாலகத்தில் திருக்குறள் சார்ந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.பின், அவர் கூறுகையில், பொது நுாலகத் துறை சார்பில் கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் 23 முதல் 31ம் தேதி வரை திருக்குறள் விளக்க உரைகள், கருத்தரங்கம், மாணவ, மாணவியருக்கான திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.பள்ளி மாணவ, மாணவியர் திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5,000, இரண்டாம் பரிசாக 3,000, மூன்றாம் பரிசாக 2,000 வழங்கப்படும். இந்த வாய்ப்பை பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். அப்போது, மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி