உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைப் லைன் சீரமைப்பு

பைப் லைன் சீரமைப்பு

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலியால் சீரமைக்கும் பணி நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுாரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் செல்கிறது. இந்த கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி விரயமானது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பை, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !