உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதம்

பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதம்

கடலுார் : கடலுார் முதுநகர் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் முதுநகர் வசந்தராயன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பற்றி எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, அருகிலிருந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கடலுார் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ