மேலும் செய்திகள்
கோயிலில் உழவாரப் பணி
23-Sep-2025
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப்பணிகள் நடந்தது. சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் அனைத்து இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில், கர்நாடகா, ஆந்திரா, பெங்களூர், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள், பெண்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சிவ பக்தர்கள் உள்ளிட்டோர் உழவார பணியில் ஈடுப ட்டனர். கோவில் வெளிப்பிரகாரம், உள்பிரகாரம் மற்றும் ஆயிரங்கால் மண்டபப் பகுதி மற்றும் சிவகங்கை குளத்திற்கும் இடையில் உள்ள பகுதிகளிலும் சுத்தம் செய்து உழவார பணியில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல சிவகாம சுந்தரி அம்மன் மற்றும் தெற்கு வீதி கோபுர பகுதி, வடக்கு வீதி, கீழ வீதி, மேலவீதி, முக்கூர்ணி விநாயகர் கோயில், வெளிப்பிரகாரங்கள், முருகர் சன்னதி ,நவகிரகங்கள் சன்னதி அருகே உள்ள வளாகம், உள்ளிட்ட பகுதிகளிலும் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.
23-Sep-2025