உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., நாளை ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு

பா.ம.க., நாளை ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு

கடலுார் : கடலுாரில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலா ளர் முத்துகிருஷ் ணன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. உரிய தரவுகளை திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1,000 நாட்கள் ஆகிறது. வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது, இட ஒதுக்கீடு வழங்க முடியாது என கூறுகிறார்.இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து வன்னி யர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் நாளை (24ம் தேதி) காலை 10.00 மணிக்கு கடலுார் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், கடலுார் மாவட்ட வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட அனைத்து சமுதாய இளைஞர்கள், பெண்கள், மாணவ மாணவிகள், விவசாயிகள், பா.ம.க., வினர் என அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை