மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு
கடலுார், : கடலுாரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலுாரைச் சேர்ந்த 16வயது சிறுமி, பிளஸ் 1 படிக்கிறார். அவருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 18வயது வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த 4மாதங்களாக பழகி வந்தனர்.இந்நிலையில் கடந்த 19ம் தேதி, சிறுமியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு வாலிபர் வந்தார். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை, சிறுமியின் தந்தை பார்த்து வாலிபரை எச்சரித்து அனுப்பினார். அதன்பின்னும் இருவரும் தொடர்ந்து மொபைல் போனில் பேசி வந்தனர்.இதுகுறித்து கடலுார் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை அளித்த புகாரில், வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.