உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை பள்ளத் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் இளங்கோவன்,32; இவர் எம்.புதூரில் உள்ள ஆயில் மில்லில் சூப்பர் வைசராக வேலை செய்து வருகிறார். இளங்கோவன் அவரது உறவினரான 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி இளங்கோவன் நெருங்கி பழகி வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது தாயார் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்ற போது, சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சிறுமியை கர்ப்பமாக்கிய இளங்கோவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ