உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா பதுக்கிய வாலிபர் விசாரணையில் தப்பி ஓடிய போது மடக்கி பிடித்த போலீசார்

கஞ்சா பதுக்கிய வாலிபர் விசாரணையில் தப்பி ஓடிய போது மடக்கி பிடித்த போலீசார்

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தபோது தப்பி ஓடிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் மகன் சந்தோஷ், 21. இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, சந்தோஷ் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து, பகல் 1:00 மணியளவில் விசாரித்தனர். அப்போது, திடீரென தப்பி ஓடினார். இதனால் அதிர்ச் சியடைந்த போலீசார் பின் தொடர்ந்து சென்று வயலில் பதுங்கிய சந்தோைஷ மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து சந்தோைஷ கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் போலீசார் விசாரணையின் போது வாலிபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை