உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.பி., அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள்

எஸ்.பி., அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள்

கடலுார்: வீர மரணமடைந்த காவலர்களின் நினைவாக ஆண்டுதோறும், அக்.21ம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வீர வணக்க நாளையொட்டி, அங்குள்ள நினைவு துாணுக்கு எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று காலை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, டி.எஸ்.பி., அப்பாண்டைராஜ், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் விஜய குமார், உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். பின் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் மூன்று முறை முழங்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை