காவல்துறை வாகனங்கள் எஸ்.பி., மாதாந்திர ஆய்வு
கடலுார்: கடலுாரில் காவல் துறை வாகனங்களை எஸ்.பி., ராஜாராம் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்ட காவல் துறையில் 63 பஸ், லாரி, ஜீப், 42 இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்களை நேற்று எஸ்.பி., ராஜாராம் மாதாந்திர ஆய்வு செய்தார். அப்போது, காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், எரிபொருள் சரியான அளவில் பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வாகனங்கள் தொடர்பான பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஆயுதப்படை டி.எஸ்.பி., (பொறுப்பு) சவுமியா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், சப் இன்ஸ்பெகட்ர் முகமது நிசார் உடனிருந்தனர்.