மேலும் செய்திகள்
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
28-Oct-2024
கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
23-Oct-2024
மந்தாரக்குப்பம்; நெய்வேலி ரோட்டரி கிளப் ஆப் லிக்னைட் சிட்டி சார்பில் மந்தாரக்குப்பம் கடை வீதியில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சீனிவாசன், பொருளாளர் அலெக்ஸ் ஆண்டனி முன்னிலை வகித்தனர். டாக்டர் ராமச்சந்திரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அதில் பள்ளி மாணவ, மாணவியர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்று, போலியோவை ஒழிப்போம்; போலியோ இல்லாத உலகை உருவாக்குவோம் என, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு சென்றனர். வழக்கறிஞர் நாகரத்தினா, சங்க நிர்வாகிகள் குருமூர்த்தி, பாலாஜி, கார்த்திகேயன், சீனிவாசன், சந்திரமவுலி, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Oct-2024
23-Oct-2024