உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் கண்டிஷன் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் ஷாக்

கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் கண்டிஷன் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் ஷாக்

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க ஆளும் கட்சியான தி.மு.க.,வும் எதிர்கட்சியான அ.தி.மு.க., தீவிர களப்பணி ஆற்றி வருகின்றன. கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., வினர் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கியும், அ.தி.மு.க., வினரோ கடந்த கால ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை விளக்கி கூறியும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க.,-அ.தி.மு.க., மாறி மாறி பிரசாரம் செய்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி என 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும் பொதுக் கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டுமென, முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.இதற்காக கூட்டம் நடத்தும் இடத்திற்கு அருகில் இருந்து கட்சி நிர்வாகிகள் மூலமாக வேன், டாடா ஏஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக குறிப்பிட்ட தொகை வழங்கி பெண்களை பொதுக் கூட்ட மேடைக்கு எதிரில் மாலை 6:00 மணிக்கு அமர வைத்து விடுகின்றனர். பொதுக் கூட்டங்களில் அதிகளவில் பங்கேற்க 7:00 மணி முதல், 9:00 மணிக்குள் கூட்டத்தில் முடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் கூட்டம் நடந்தால் கூடுதல் நேரத்திற்கு ஏற்ப கூடுதல் தொகை மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும். நீண்ட நேரம் காக்க வைக்கக் கூடாது என, கண்டிஷன் போடுகின்றனர். இதனால் வேறு வழியின்றி இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்குமாறு முக்கிய நிர்வாகிகளிடம் கூறி விடுகின்றனர். பெண்கள் போடும் கண்டிஷனால் அ.தி.மு.க.,-தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ