மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா
14-Jan-2025
மந்தாரக்குப்பம்; கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் தலைமை தாங்கி பொங்கல் திருநாள் சிறப்பு பற்றியும், தமிழர் மரபு குறித்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிஜோசப் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடல்,பாடல், மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜஸ்ரீ, ஆசிரியர் சாந்தி, மேரி புஷ்பலதா, லயோனா, கீதாமஞ்சித், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.
14-Jan-2025