உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பத்மாவதி நகரில் பொங்கல் பண்டிகை

பத்மாவதி நகரில் பொங்கல் பண்டிகை

கடலுார்: கடலுார் பத்மாவதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் எட்வர்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாதேவ் சிங், மணிமாறன் முன்னிலை வகித்தனர். வரி, வாக்களிப்போர் சங்க தலைவர் போஸ் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இதில், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அருமைச்செல்வம், பன்னீர்செல்வம், டாக்டர் கேசவன் வாழ்த்துரை வழங்கினர். உதயகுமார், செல்வராஜ், சாமுவேல், வெங்கடேசன், சுந்தரமூர்த்தி, ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை