உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு

கடலுார், : கடலுாரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் உதயகுமார், ஜாக்டே ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும். இ.எல்., சரண்டர் மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, மாநில பொருளாளர் கார்த்திகேயன், மாநில சட்ட செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சிவா, பாலகிருஷ்ணன், பிரகாஷ், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ