உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குண்டும் குழியுமான சாலை விபத்து அபாயம்

 குண்டும் குழியுமான சாலை விபத்து அபாயம்

மந்தாரக்குப்பமம்: குண்டு குழியுமான சாலையால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. நெய்வேலி, மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பஸ் நிலையம் முன்பு ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக சாலை மாறி, மழை நீர் தேங்கியுள்ளது. வாகன ஒட்டிகள் பஸ் நிலையத்திற்குள் செல்லும் போது பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ