மின்கம்பி அறுந்து விழுந்தது கரும்பு தோட்டம் எரிந்து சேதம்
நெல்லிக்குப்பம் : தென்னை மரம் விழுந்ததில், மின்கம்பி அறுந்து கரும்பு தோட்டம் எரிந்தது.கடலுார் கோண்டூரை சேர்ந்தவர் சர்வேஸ்வரன். இவருக்கு, நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் அருகே வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புறம் அவருக்கு சொந்தமான வயலில் கரும்பு பயிரிட்டுள்ளார்.நேற்று மாலை வீட்டின் முன் இருந்த தென்னை மரம் முறிந்து வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்ததால் தீப்பொறி ஏற்பட்டு கரும்பு தோாட்டத்தில் விழுந்தது. அதில், கரும்பு தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமானது. மேலும், வீடு இடிந்து சேதமானது.