மேலும் செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
25-Jun-2025
பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி, நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. சோமஸ்கந்தர் உள் புறப்பாடு நடந்தது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேப் போன்று, நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர், மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
25-Jun-2025