உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனி நபர் நுாலக விருது வழங்கல்

தனி நபர் நுாலக விருது வழங்கல்

சிதம்பரம்: கடலுார் புத்தக திருவிழாவில், சிதம்பரத்தை சேர்ந்தவருக்கு தனி நபர் நுாலக விருது வழங்கப்பட்டது.சிதம்பரத்தை சேர்ந்த மஞ்சு பாலாஜி என்பவர், வி.எஸ்.ஆர்., நகரில், உள்ள வீட்டில், செந்தாமரை சீனிவாசன் என்ற பெயரில், கடந்த 6 ஆண்டுகளாக நுாலகம் நடத்தி வருகிறார். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஏராளமான வாசகர்கள் தினமும் படித்து வருகின்றனர்.இந்நிலையில், கடலூரில் நடந்துவரும் புத்தக திருவிழாவில், செந்தாமரை சீனிவாசன் நுாலகத்திற்கு தனி நபர் நூலக விருது வழங்கப்பட்டது. வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் விருதை வழங்கினர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.பி., விஷ்ணுபிரசாத், எஸ்.பி., ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை