சாதனை மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
காட்டுமன்னார்கோவில்; குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுப்பரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பிளஸ் 2 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி சரோஜாவிற்கு மொபைல் போன், 10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி சோபிகாவுக்கு சைக்கிள், இரண்டாமிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கினார். மேலும், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். விழாவில், கல்லுாரி பேராசிரியர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.