உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பு.முட்லுார் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு

பு.முட்லுார் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தினி ராகேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, தங்கமணி செந்தில் ஏெஜன்சி உரிமையாளர் செந்தில்குமார் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுவழங்கினார். தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் ராகேஷ், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, முன்னாள் மாணவர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ