உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சொத்து தகராறு : தம்பதி மீது வழக்கு

சொத்து தகராறு : தம்பதி மீது வழக்கு

வடலூர்: சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்தனர் வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி பூங்கொடி, 45. இவருக்கும், இவரது உறவினர் பிரபாகரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் பிரபாகரன், அவரது மனைவி அனுஷ்கா ஆகியோர் பூங்கொடி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட பூங்கொடி மகன் வினோத்குமார், பூங்கொடி இருவரையும் தம்பதி தாக்கினர். காயமடைந்தவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட பிரபாகரன், அனுஷ்கா ஆகியோர் மீது வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை