தி.மு.க., வை கண்டித்து போராட்டம் அ.தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் தங்கராஜன் தலைமை தாங்கினார்.அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் முருகமணி, மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள்அழகன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரவு செயலர் வழக்கறிஞர் அருண், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் அய்யாசாமி, மாவட்ட ஜெ., பேரவை செயலர் உமா மகேஸ்வரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். நகர செயலர் சந்திரகுமார் வரவேற்றார்.ஒன்றிய செயலர்கள் தம்பிதுரை, கருப்பன், செல்வக்குமார், விநாயக மூர்த்தி, நீதிமன்னன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 24ம் தேதி எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவது, திட்டக்குடி, புவனகிரி, விருத்தாசலம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் 9பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.