உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 65 ஹெக்டேர் அரசு இடம் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல்

65 ஹெக்டேர் அரசு இடம் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே மலையடிக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு, அரசுக்கு சொந்தமான 65.75 ஹெக்டேர் தரிசு நிலத்தை அப்பகுதியில் உள்ள 84 பேர் ஆக்கிரமிப்பு செய்து விளை நிலமாகவும், வீடுகள் கட்டியும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை மூலம் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கியும் அகற்றவில்லை. ஆனால், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.இந்நிலையில் நேற்று காலை கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் வருவாய்த் துறையினர், ஜே.சி.பி., இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் போலீசை முற்றுகையிட்டு, ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், அ.தி.மு.க., கடலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், மாவட்ட விவசாய சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தட்சணாமூர்த்தி, பா.ஜ., மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, தென் மேற்கு ஒன்றிய செயலாளர் பரதன் உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்த நிலங்களில் முந்திரி மரங்களில் பூ வைத்துள்ளதால், கால அவகாசம் கேட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதியம் 1:00 மணிக்கு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து மரங்களை அகற்றும் பணி நடந்தது. இதனால், அப்பகுதியில் முதல் பதற்றம் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ