உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீர் நிலையை பாதுகாக்க கோரி தர்ணா போராட்டம்

நீர் நிலையை பாதுகாக்க கோரி தர்ணா போராட்டம்

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, நீர்நிலையர பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீமுஷ்ணம் தாலுகா கார்மாங்குடி கிராமத்தில் குளம், நீர் வடிகால் பகுதியை கள ஆய்வு செய்யாமல், நத்தம் புறம்போக்கு என இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினர். கடந்த மாதம் குளத்தை துார்த்து அளவீடு செய்ய வந்தபோது, பொதுமக்கள் தடுத்து நிறுத்தி பட்டாவை ரத்து செய்து, நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், அதிகாரிகள் பட்டா வழங்கியதை நியாயப்படுத்தி, இருபிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி அந்த கிராம மக்கள் நேற்று மாலை, கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இடத்தை ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என கூறியதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை