உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளத்தின் நடுவே மின்கம்பங்கள்; மாற்றி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

குளத்தின் நடுவே மின்கம்பங்கள்; மாற்றி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம், பெரியகண்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள வெண்ணு மலையப்பர் கோவில் குளம் துார்வாரும் பணி கடந்த ஒரு மாதமாக நடக்கிறது. இந்த குளத்தின் நடுவே உயர்மின் அழுத்த மின் கம்பம் செல்கிறது. இதனால், மின் கம்பம் உள்ள பகுதிகளில் துார்வார முடியாத நிலை உள்ளது. மேலும், மின்கம்பங்கள் குளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே, குளத்தின் நடுவே செல்லும் மின் கம்பங்களை மாற்றி அமைக்கக்கோரி, கிராம மக்கள் நேற்று மாலை 5:00 மணியளவில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில், உரிய நடவடிக்கை இல்லை என்றால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அவர்களாகவே கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை