உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கொத்துாரில் போராட்டம்

மா.கொத்துாரில் போராட்டம்

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே சிமென்ட் சாலை அமைக்காததை கண்டித்து கிராம பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிறுபாக்கம் அடுத்த மா.கொத்தனுாரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, காலனி பகுதியிலுள்ள தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்காமல், மண் சாலையாக உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மங்களூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை.இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த மழையில், தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கிராம பெண்கள், நேற்று காலை தெருக்களில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் சமரச பேச்சுக்கு வராததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை