சர்வீஸ் சாலையில் மறியல்; ரவுடி உட்பட 3 பேர் கைது
கிள்ளை; சிதம்பரம் அருகே சர்வீஸ் சாலையில் மறியல் செய்த ரவுடி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேடு கிராமத்தை சேர்ந்தவர் நிரபு, 37; ரவுடி. இவர் நேற்று நிலுவையில் உள்ள வழக்கு சம்பந்தமாக சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியே வந்தார்.அப்போது, புதுச்சத்திரம் போலீசார் மற்றும் டெல்டா பிரிவு போலீசார் புதிய வழக்கில் அவரை கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டிற்கு எதிரே சர்வீஸ் சாலையில் காலை 11:05 மணிக்கு மறியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிரபு உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதன் காரணமாக சிதம்பரம்-கடலுார் சாலையில் 11:30 மணி வரை 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.