உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் சடலத்துடன் மறியல் சிதம்பரம் அருகே பரபரப்பு

பெண் சடலத்துடன் மறியல் சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.கொளக்குடியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகள் பூமிகா,24; இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்டாலின் மகன் ஸ்டீபன்,26; என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்தனர்.திருமணம் செய்து கொள்ள கேட்டதற்கு ஸ்டீபன் மறுத்துள்ளார். மனமுடைந்த பூமிகா கேராளாவில் கூலி வேலை செய்யும் தாய் மணிமேகலையிடம் பேசி உள்ளார். ஆறுதல் கூறிய தாய், கடந்த 9 ம் தேதி மகளை கேரளாவிற்கு அழைத்து சென்றார்.மணிமேகலை வேலைக்கு சென்றதும் பூமிகா, கடந்த இரு நாட்களுக்கு முன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு காரணம் ஸ்டீபன் எனக் கூறி கடிதம் எழுதி வைத்துள்ளார்.கேரள போலீசார் வழக்கு பதிந்து, பிரேத பரிசோதனக்கு பின், உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். நேற்று முன்தினம் இரவு கேரளாவில் இருந்து, பூமிகா உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சை உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் போலீஸ்ஸ்டேஷனில்் நிறுத்தி ஸ்டீபன் மீது நடவடிக்கை கோரி முறையிட்டனர்.நேற்று மதியம் மா.கொளக்குடி கிராமத்தில் இருந்து, உடல் அடக்கம் செய்ய புறப்படும் போது, உறவினர்கள், ஸ்டீபன் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி சிதம்பரம் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்து பகல் 12:00 மணிமுதல் 12:30 மணி வரை மறியல் செய்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை